மேஷ ராசிக்கு புதனின் பெயர்ச்சி மிகவும் சாதகமான பலனைத் தருவதாக இருக்கும். நீங்கள் இருக்கும் எந்த துறையாக இருந்தாலும் அதில் நல்ல வெற்றியை அடைந்திட முடியும். வேலை தேடுவோருக்கு புதிய வேலை கிடைக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.

மிதுன ராசி அதிபதியான புதன் பகவான், மகரத்தில் சூரியனுடன் சேரும் போது புதாத்திய யோகம் உருவாகிறது. இதன் காரணமாக உங்களுக்கு பல வர வேண்டிய பணம் வந்து சேருவதோடு, நீங்கள் எதிர்பார்க்காத சில பண வரவும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் சமூக அந்தஸ்து உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு எல்லா வகையிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். மன மகிழ்ச்சி அடையும்.

சிம்ம ராசி அதிபதியான சூரியனுடன் புதன் பகவான் சேர்க்கை நடப்பதால், இதுவரை நீங்கள் செய்த கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும்.
உங்கள் எதிரிகள் அமைதியாக இருப்பார்கள். அவர்களை எளிதாக சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மை ஏற்படும். கடனை திருப்பி செலுத்தக்கூடிய அளவு நிதி நிலை உயரும். உங்கள் வேலையில் வெற்றி பெறத் தொடங்குவீர்கள்.

துலாம் ராசிக்கு 4ம் இடமான சுக ஸ்தானத்தில் புதாத்திய யோகம் உருவாகும் என்பதால் தாயாரின் உடல்நிலை மேம்படும். சுக போகங்கள் அதிகரிக்கும். நீங்கள் அசையும், அசையா சொத்துகள் வாங்க வாய்ப்புள்ளது. . நல்லவர்களின் சகவாசம் கிடைக்கும்.

மீன ராசிக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். நிதி நிலைமை உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. பயணங்களால் உங்கள் வருமானத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும். வேலை செய்பவர்களின் தங்கள் வேலையிலும், பொருளாதாரத்திலும் உயர்வு இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *